துபாயை தொடர்ந்து சவுதி அரேபியாவை புரட்டி எடுக்கும் கனமழை… பல இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

Saudi Arabia: ஐக்கிய அரபு எமிரேட், துபாய் மற்றும் சார்ஜா பகுதிகளில் கடந்த ஏப்ரல் பதினாறாம் தேதி பெய்த கனமழையின் காரணமாக நாட்டின் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விமான போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து ஆகியவை துண்டிக்கப்பட்டன.

பள்ளிகளுக்கும் ஆன்லைன் கிளாஸ்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சவுதி அரேபியாவில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தங்களின் புதிய தலமாக கருதப்படும் மதினாவிலும் கனமழை சூழ்ந்துள்ளது.

எனினும் கனமழையையும் பொருட்படுத்தாமல் பலர் தங்களது பள்ளிவாசலில் தொழுகைகளை மேற்கொண்டனர். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் பல இடங்களிலும் குளங்கள் மற்றும் குட்டைகள் போன்றவை நீரில் நிறைந்துள்ளன.

மேலும் பெய்யும் கனமழையின் காரணமாக இடங்களிலும் வெள்ளம் சூழ வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துபாயில் வருகின்ற மே 2 மற்றும் 3ம் தேதி மழை பெய்யும் எனவும், தூசி காற்று வீசப்படும் எனவும், சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சவுதி அரேபியாவிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.