ஜனநாயக கடமையை நிறைவேற்ற அரபு நாட்டில் இருந்து தாரைதாரையாக புறப்பட்ட இந்தியர்கள்… கனமழையிலும் கடமை தான் முக்கியம்!

UAE:இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. முதல் கட்ட தேர்தல் ஆனது தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது கட்டத் தேர்தல் மற்ற தென்னிந்திய நாடுகளான கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் நடைபெற இருக்கின்றது. அரபு நாடுகளைப் பொறுத்தவரை கேரளாவை சேர்ந்த ஏராளமான மக்கள் பணி புரிகின்றனர்.

சிங்கப்பூரில் எப்படி தமிழர்கள் அதிகமோ ஐக்கிய அரபு நாடுகளை பொறுத்தவரை கேரளா மக்களின் பங்களிப்பு இருக்கும். இந்நிலையில் கடும் வெள்ளத்தில் பொறுப்பெடுத்தாமல் ஏராளமானோர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற அரபு நாட்டிற்கு படையெடுக்கின்றனர்.

ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளா மற்றும் கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி இன்று முதல் விமான நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் இந்த ஆண்டு வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை சென்றாண்டை விட அதிகம் என புள்ளி விவரங்கள் கூறுகின்ற நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் வாக்களிக்க ஆர்வத்துடன் தாய் நாட்டிற்கு புறப்படுகின்றனர்.

கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக துபாய் ஏர்போர்ட் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்ததால் விமான போக்குவரத்து அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் 2500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.200க்கும் மேற்பட்ட விமானங்கள் அருகில் இருக்கும் விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டன.

விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்ட நபர்களுக்கு டிக்கெட்டுகளுக்கு உண்டான விலை அல்லது மாற்று டிக்கெட்டுகள் வழங்கப்படும் என விமான நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பழைய நிலைக்கு வந்ததாக துபாய் விமான நிலைய சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது . எனினும் இந்த கடினமான சூழ்நிலையிலும் ஆயிரக்கணக்கானோர் தாய் நாட்டிற்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் சென்று இருக்கின்றனர்.