UAE Tamil News

மதுரையில் இருந்து பெங்களூருக்கு ஆறு மணி நேரத்தில் வேகம் எடுக்கும் ஆரஞ்சு புகைவண்டி…. ‘வந்தே பாரத்’ சோதனை ஓட்டம் வெற்றி!

மதுரையில் இருந்து பெங்களூருக்கு வெறும் 10 மணி நேரத்தில் ரயிலில் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க ஏற்கனவே மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. இலையில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

தென் தமிழகத்திலிருந்து ஏராளமானோர் பெங்களூரில் உள்ள ஐடி துறையில் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டுமானால், முன்கூட்டியே ரயிலில் புக் செய்ய வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஆம்னி பஸ்களை நம்பி இருக்க வேண்டும். இதற்காகவே கணிசமான தொகை அவர்களுக்கு செலவாகும்.

பண்டிகை காலங்கள் என்றால் ஒரு முறை ஊருக்கு சென்று வர 5000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை தற்பொழுது உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மதுரை டு பெங்களூரு வந்தே பாரத் திட்டத்தை தொடங்க ஆலோசனை செய்யப்பட்டது. ஆரஞ்சு நிறத்தில் இயக்கப்பட்ட இந்த தொடர்வண்டி ஓசூர், தர்மபுரி, சேலம், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் நிறுத்தப்படும்.

மேலும் இதனுடன் பல்வேறு நகரங்களை இனிக்கும் திட்டம் ஆலோசனையில் இருந்து வருகின்றது. ஏற்கனவே சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்ட நிலையில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த வந்தே பாரத் ரயில்கள் அதிகமான வரவேற்பை பெற்று வரும் நிலையில் நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் இது போன்ற சிறப்பு ரயில்கள் முக்கியமான நகரங்களை இணைக்கு பொருட்டு கொண்டுவரப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் சில நாட்களில் தொடங்கவிருக்கும் நிலையில், அதிகரித்து வரும் ரயில்களின் எண்ணிக்கை மக்களிடையே உற்சாக வரவேற்பை பெற்று வருகின்றது. இனி பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணம் உயரும் என அச்சம் கொள்ளாமல் முன்கூட்டியே ட்ரெயின் டிக்கெட் எடுப்பதற்கு இந்த சேவை வசதியாக இருக்கும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.