இந்த செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்தால் ஏராளமான ஆஃபர்… புது தகவலை வெளியிட்ட du நிறுவனம்!

அரபு நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் டியோ (du) எனப்படும் மொபைல் ஆப்ரேட்டர் சேவையை பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் உள்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் குடியிருப்பாளர்கள் பெரும்பாலானூர் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிட்ட தகவல் ஆகும். கடந்த சில காலாண்டுகளில் இந்நிறுவனத்தின் தேவையானது அதிகரித்து வரும் பட்சத்தில் தனது புது பண பரிமாற்ற சேவையை துவங்க du திட்டமிட்டுள்ளது.

du செயலியை புதிதாக அறிமுகப்படுத்தவருக்கும் இந்நிறுவனம் இதன் மூலம் ஒரு அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்ட் இருக்கு எளிதாக பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதில் பயனர்கள் தங்களது சம்பளத்தை டெபாசிட் செய்து வைத்துக் கொள்ளலாம் எனவும் தேவைப்படும் பொழுது டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

மேலும், புது ஏடிஎம் கார்டையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்த இந்நிறுவனம் தற்பொழுது ஏடிஎம் இல்லாமல் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேவையை புதிதாக உபயோகப்படுத்தும் பயனாளர்களுக்கு பல ஆபர்களையும் அறிவித்துள்ளது.

ஒரு அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு பண பரிமாற்றம் செய்வதற்கு எந்தவித சேவை கட்டணம் வசூலிக்க படாத என்ன தெரிவித்துள்ளது. மேலும் பயன்படுத்துபவர்களுக்கு பத்து ஜிபி மொபைல் டேட்டா இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலியை டவுன்லோட் செய்யும் அனைவருக்கும் 5 திர்ஹாம்ஸ் பணம் ஆனது அக்கவுண்டில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை எட்டு மில்லியன் பயனாளர்களுக்கு மொபைல் சேவையை வழங்கி வரும் நிறுவனம் பண பரிமாற்றத்திலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது