ஊட்டி ,கொடைக்கானலுக்கு போறீங்களா? இ- பாசினை மறக்காம எடுத்துட்டு போங்க.. அரசு வெளியிட்ட பொது அறிவிப்பு!

E-pass: கோடை காலம் என்றால் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் பெரும்பாலும் செல்லும் இடம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் தான்.. பள்ளி விடுமுறை விடும்பொழுது குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதற்கு குடும்பத்துடன் பெரும்பாலான மக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு படையெடுப்பதுண்டு. பள்ளி விடுமுறை ஆரம்பித்த நாளிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலை ஆனது வாகன கூட்டங்களால் நிரம்பி வழிவது இதற்கு எடுத்துக்காட்டாகும்.

நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகளால் கொடைக்கானல் சாலையை கடப்பதற்கு பல மணி நேரங்கள் ஆகின்றன என சாலையில் தினமும் பயணிப்பவர்கள் கூறுகின்றனர். எனவே, ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் மக்கள் தொகை அதிகரிப்பதன் காரணமாக, வருபவர்களின் விபரங்களை அறிய இபாஸ் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் பெயரில் மே ஏழாம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ பாஸ் எடுக்க விரும்பும் நபர்கள் https://epass.tnega.org/  என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பெயர், முகவரி, சுற்றுலாவிற்கு வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, வாகனங்களின் விவரம் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு வழங்கப்படும் பாஸ்கலின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்த பாஸ் நடைமுறை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மூன்று வண்ணங்களில் பாஸ் வழங்கப்படும் எனவும், உள்ளூர் மக்களுக்கு பச்சை நிறம், வணிக நோக்கங்களுக்காக வாகனத்தை இயக்குபவர்களுக்கு நீல நிறம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஊதா நிறம் போன்ற வண்ணங்களில் வாசனை வழங்க திட்டமிட்டுள்ளது.

உள்ளூர்வாசிகள் ஒருமுறை பாஸ் எடுத்தாள் அதனை ஜூன் 30 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டி இரு மாவட்டங்களில் ஆட்சியர் அவர்களும், திங்கட்கிழமையான நேற்று பதிவு செய்யும் போர்டல் பற்றிய விவரங்களை வெளியிட்டனர். கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்ட காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போன்றோர் இ – பாசினை சோதனை செய்யும் பணியில் அமர்த்தப்படுபவர் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.

சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான தகவல்களை பூர்த்தி செய்து பாசினை ரெடியா வைத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.