ஐக்கிய அரபு எமிரேட்டில் மீண்டும் சூழ்ந்த கனமழை… பல்வேறு இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி துபாய் மற்றும் சார்ஜாவில் பெய்த கனமழையின் காரணமாக துபாய் மற்றும் சார்ஜாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளின் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் தேங்கியதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமான நிலையங்களில் சேர்ந்த வெள்ளத்தின் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சார்ஜாவில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் பத்து நாட்களுக்கு மேலும் வெள்ளநீர் வடியாததால் அப்படி இருக்கப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களது அன்றாட தேவைகளான குடிநீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். தன்னார்வலர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கொண்டு போய் சேர்க்கப்பட்டன.

துபாயில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் முதல் அதிகாரிகள் வரை மேற்கொண்ட இடைவிடா முயற்சியின் காரணமாக நிலைமை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் மே இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி துபாயும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுதிருந்த நிலையில் என் பெரும்பாலான இடங்களில் தற்பொழுது கனமழை பெய்து வருவது மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

பெரும்பாலான இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் மட்டும் இல்லாமல் துபாயிலும் நேற்று அதிகாலை முதலே பல இடங்களில் கன மழை பெய்ய தொடங்கியது. மேலும் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தற்பொழுது தான் ஆங்காங்கே தேங்கிய மழை நீர் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

அபுதாபியில் இருந்து மழை மேகங்கள் ஐக்கிய அரபி எமிரேட் முழுவதும் கனமழையே வருவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது வரை சாலையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் தொடர்ந்து மழை பெய்தால் அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கும் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். எனவே பல்வேறு பகுதிகளுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கவனத்துடன் இருக்கும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.