2024 ஆம் ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக சவுதி அரேபியா அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள்!!

இந்துக்கள் தங்கள் புனித தளமான காசிக்கு செல்வது போல் , இஸ்லாமியர்கள் தங்கள் புனித தளமான ஹஜ் மற்றும் உம்ராவிற்கு செல்வது வழக்கம். இதற்காகவே தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறு சிறிதாக தொகையை சேர்த்து வைத்து விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் தங்களது வசதிக்கு ஏற்றார் போல் டிக்கெட்டுகளை எடுத்து சவுதியில் உள்ள புனித தளமான ஹஜ் மற்றும் உம்ராவிற்கு யாத்திரைகள் மேற்கொள்வது வழக்கம்.

சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் , யாத்திரைகளை மேற்கொள்ள வரும் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றது. அதே நேரம், யாத்திரைகளை மேற்கொள்ள வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பல விதிமுறைகளை சவுதி அரேபியா அரசு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஹச் பயணம் மேற்கொள்ள வரும் மக்கள் நஸ்க் வலைதளம் மூலம் பதிவு செய்வது கட்டாயம் என அறிவித்திருந்தது. என்றாலும் அதே நடைமுறை தொடரும் என்றும், பொதுமக்கள் குறிப்பிட்ட தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை சரி பார்க்க சகாட்டி எனப்படும் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் அதில் பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்த செயலியில் தங்கள் தடுப்பூசி சான்றிதழ் அனைத்தும் அப்லோட் செய்யப்படும் வசதி உள்ளதால், அதன் மூலம் தடுப்பூசி போட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய எளிதாக இருக்கும் என்பதால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தபடவுள்ளது

1.ஹச் பயணம் மேற்கொள்ள வரும் வெளிநாட்டவர்கள் அவர்கள் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் Neisseria Meningitidis எனப்படும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மேலும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை அவர்களது சொந்த நாட்டில் உறுதி செய்திருக்க வேண்டும்.

2.ஜூன் ஏழாம் தேதி 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.

    3.12 வயது நிரம்பியவர்கள் மட்டுமே யாத்திரைகள் மேற்கொள்ள முடியும்.

    4.கொரோனா, மூளைக்காய்ச்சல் மற்றும் பருவக்காய்ச்சல் போன்றவற்றிற்கான தடுப்பூசிகளை போட்டிருப்பது அவசியம்.

    5.சுகாதார சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு 2024 ஆம் ஆண்டு புனித யாத்திரை மேற்கொள்ள வரும் மக்களுக்காக பல விதிமுறைகளை ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் யாத்திரை மேற்கொள்ள வரும் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படுகின்றது என்பதால், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சவுதி அரேபியா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.