துபாயில் அடுத்தடுத்து மழை பெய்யுமா? மக்களின் சந்தேகத்திற்கு துபாய் வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல்!

UAE: துபாயில் கடந்த ஏப்ரல் மாதம் பதினாறாம் தேதி பெய்த கனமழையால் மக்கள் பெருமளவில் பாதிப்பு சந்தித்த நிலையில் மே ஐந்தாம் தேதி மற்றும் ஆறாம் தேதி பெய்த மழையினை மக்கள் ஓரளவு சமாளித்து விட்டனர். இந்நிலையில் மீண்டும் கனமழை வரக்கூடுமா? என்ற கேள்விக்கு துபாயில் வானிலை ஆய்வு மையம் பதில் அளித்துள்ளது. துபாயில் பொதுவான இரண்டு காலங்கள் என்றால் அது குளிர் காலம் மற்றும் கோடை காலம் தான்.

குளிர்காலம் என்பது டிசம்பர் முதல் மார்ச் வரை உள்ள காலமாகும். இந்த காலகட்டத்தில் குளிரானது 16.4 டிகிரி செல்சியஸ் வரை செல்ல வாய்ப்பு உண்டு. கோடைகாலம் என்பது துபாயை பொருத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலமாகும் இந்த காலங்களில் வெப்பம் கடுமையாக இருக்கும். குறிப்பாக தெற்கு பகுதிகளில் வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

இதற்கு இடைப்பட்ட காலத்தை ட்ரான்சிசன் காலம் என்பர். அதாவது குளிர்காலத்தில் இருந்து கோடை காலத்திற்கு மாறுவதற்கு எடுத்துக்கொள்ளும் காலமாகும். வசந்த காலம் போல இந்த காலகட்டத்தில் வெப்பநிலையானது மிகவும் அதிகமாக இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் மிதமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாய் தான் துபாயில் கன மழை பெய்தது

அதேபோன்று துபாயில் அடுத்த மாதம் கோடைக்காலம் ஆரம்பிக்கவுள்ளது என்பதால் அப்பொழுது மழை பெய்யுமா என்ற கேள்வி மக்களுள் எழுந்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறும் பொழுது அடுத்த மாதம் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாறும் என்பதால் வெப்பநிலை படிப்படியாக எல்லா இடங்களிலும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர்.

ஒரு சில மலைப்பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறுகின்றனர். சூரியன் வடக்கு நோக்கி நகர ஆரம்பிப்பதால் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார். எனினும், அடுத்த இரண்டு நாட்களில் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் லேசான தூறல் பெய்ய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது துபாயில் உள்ள மக்கள் அனைவரும் இன்னும் வருகின்ற காலங்களில் நிம்மதியா இருக்கலாம் என்று தெரிகின்றது.