துபாய் மற்றும் சார்ஜாவில் இன்டர்சிட்டி பேருந்து சேவைகளை மீண்டும் துவங்க உள்ளதாக அறிவித்த RTA மற்றும் SRTA…

ஏற்கனவே, அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம்(NCM) வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த வியாழக்கிழமை தீவிரமடையும் வானிலையால் அமீரகம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அனைத்து எமிரேடுகளிலும் இன்டர்சிட்டி போக்குவரத்து சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மோசமான வானிலை முடிவுக்கு வந்த நிலையில், சார்ஜாவின் போக்குவரத்து ஆணையம்(RTA) துபாய் மற்றும் அபுதாபி போன்ற இடங்களுக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி பேருந்து சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் தற்போது துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்(SRTA) இன்டர்சிட்டி பேருந்து சேவையை நேற்று முதல் தொடங்கியது. இதனால் அமீரகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.