தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம்…. சார்ஜாவில் வீட்டை விட்டு வெளியேறிய பாகிஸ்தானிய இளைஞர்… மூன்று வாரங்களுக்கு பின் கிடைத்த அதிர்ச்சி தகவல்!

தன் தாயுடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தின் காரணமாக மூன்று வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் மூன்று வாரங்களுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அஜ்மான் நகரில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்ராகிம் முகமது எனப்படும் 17 வயது இளைஞனுக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். குடும்பத்திற்கு மூத்த மகன் ஆன இவர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு தீராத வடுவை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து தொலைந்து போன இளைஞனின் தந்தை கூறும் பொழுது கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய எங்களது மகன் எப்பொழுதாவது உயிரோடு கிடைப்பான் என்ற நம்பிக்கையில் காவல்துறையில் அழைத்து காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவன் இப்படி கிடைப்பான் என்று நாங்கள் நினைத்து பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

இப்ராஹீமின் தாய் கூறும் பொழுது என்னுடைய நிலைமை உலகத்தில் உள்ள எந்த தாய்க்கும் வரக்கூடாது எனக்கூறி அழுதார் என் மகன் முதல் முதலாக பிறக்கும்பொழுது எங்கள் குடும்பத்திற்கு ஒளிவிளக்காக இருந்து வழிநடத்து செல்வான் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம் மேலும் அவர்கள் தம்பிகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருப்பான் என்ன நம்பிக்கையுடன் இருந்தோம் ஆனால் எங்களது இதயத்தை சுக்குநூவா நொறுக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு அவர்கள் நினைப்பது எல்லாம் நடக்க வேண்டும் என்ற ஆசைதான் மேலோங்கி உள்ளது. அவர்களுக்காக பெற்றோர்கள் படும் கஷ்டத்தினை நினைத்து கூட பார்க்க விருப்பமில்லாத வகையில் தான் அவர்களது நாகரிக வாழ்க்கை நகர்கின்றது. பொறுமை என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாத வகையில் தான் பலரும் உள்ளனர். நம் பெற்றோர்கள் சொல்லும் அனைத்தும் நம் நன்மைக்கு தான் என்ற ஒரு எண்ணம் இருந்தால் போதும் வாழ்க்கையில் எவ்விதமான துன்பங்களும் நம்மைச் சேராது.