அப்பாடா… என நிம்மதி பெருமூச்சை விட்ட துபாய் மக்கள்… சீரற்ற வானிலை முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு!

UAE: ஐக்கிய அரபு எமிரேட்டில் நிலவும் சீரற்ற வானிலை முடிவுக்கு வந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் பேசிய வானிலை ஆய்வு மையம் இணைந்து கூட்டாக அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்டில் நிலவிய நிலையற்ற வானிலை நாட்டையே புரட்டி போட்டு மக்கள் நிகழ்வு வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் மே 2 மற்றும் மூன்று தேதிகளில் மறுபடியும் ஐக்கிய அரபு எம்ரேட்டை கனமழை ஆட்கொள்ளும் என பேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

முன்கூட்டியே கனமழை பாதிப்பால் ஏற்பட்ட சேதத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்ததால், இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் கவனமுடன் மேற்கொள்ளப்பட்டன. பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அறிவுரைகள் முன்கூட்டியே வழங்கப்பட்டு ஆயத்தப்படுத்தப்பட்டனர். வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளிகளுக்கு ஆன்லைன் கிளாஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு அல்லாமல் தனியார் மற்றும் அரசு துறையை சேர்ந்த ஊழியர்களுக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. மக்கள் தேவை இன்றி வெளியே வர வேண்டாம் எனவும் அவர்களை அரசு கேட்டுக் கொண்டது. எதிர்பார்த்தபடியே மே இரண்டாம் தேதி காலை முதல் மழை துபாய், சார்ஜா மற்றும் அபுதாபி ஆக இடங்களில் பெய்ய தொடங்கியது

முதலில் ஆரம்பிக்கப்பட்ட லேசான மழை பல இடங்களில் கனமழையாக உருவெடுத்தது. சாலையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர்கள் தேங்கியதால் ஐக்கிய அரபு எமிரேட்டின் ஒரு சிட்டியில் இருந்து மற்றொரு சிட்டிக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்க வேண்டிய ஒன்பது விமானங்கள் அல்மகதும் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

மேலும் விமான நிலையத்திற்கு வரும் தனியார் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் மக்களின் கவலைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கனமழை முடிவுக்கு வந்துள்ளதாக வெளியான அறிவிப்பு மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. ஐயா அரபு எமிரேட்டின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் முயற்சியால் இப்பெரும் சோதனையை கடந்து வந்துள்ளோம் என அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.