கனமழையின் பொழுது விதிமுறைகளை மீறி இருந்தால் கவலை வேண்டாம்… துபாய் மற்றும் சார்ஜா அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

UAE:கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி துபாய் மற்றும் ஷார்ஜாவில் பெய்த கனமழையின் காரணமாக ஒட்டுமொத்த வளைகுடா நாடு செய்வதறியாமல் விழி பிதுங்கி நின்றது என்றே கூறலாம். ஏனென்றால், 75 வருட அரபு வரலாற்றில் பெய்யாத மழை கொட்டி தீர்த்தது என ஊடகங்கள் புள்ளி விவரங்களை வெளியிட்டன.

முக்கியமான சாலைகளிலும், நாட்டின் பல இடங்களிலும் வெள்ள நீர் தேங்கி இருந்ததன் காரணமாக பொது போக்குவரத்து ஆனது முற்றிலும் முடங்கிப் போயின. விமான நிலையங்களும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விமானத்தை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவில் மற்ற விமானங்களை பக்கத்து விமான நிலையத்திற்கு அனுப்பியது.

தன்னார்வலர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் நாட்டின் முக்கிய பகுதிகளில் வெள்ளத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சார்ஜாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் படிக்காத சூழ்நிலை இருந்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத சூழ்நிலை நீடிக்கின்றது.

பெரும்பாலான மக்களின் வாகனங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி போன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் துபாய் மற்றும் சார்ஜா அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கனமழையின் பொழுது போக்குவரத்து விதிமுறைகளுக்காக விதிக்கப்பட்ட அபராதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என துபாயின் காவல்துறை அதிகாரி அறிவித்துள்ளார்.

சார்ஜா அரசும் அபராதத்தை ரத்து செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கனமழையில் மக்கள் ஏற்கனவே தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து போராடிவரும் நிலையில் வாகனங்கள் மற்றும் தனிநபர் கடன்கள் கட்டுவதற்கான அவகாசம் ஆறு மாத காலங்களுக்கு நீடிக்கும் எனது துபாய் அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் வாகன அபராதங்களும் ரத்து செய்யப்படும் என்ன வெளியான அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர்.