இந்தியா to துபாய் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…. 70 விமானங்கள் ஒரே நாளில் கேன்சல்… விழி பிதுங்கி விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்!

UAE: இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையே விமான சேவையை வழங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இமான் நிறுவனத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ஒரே நாளில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் ஆயிரக்கணக்கான நபர்கள் விமான நிலையத்தைச் சூழ்ந்ததால் நேற்று பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறும்பொழுது உடல்நிலை சரியின்மை காரணமாக விமானத்தின் சீனியர் crew பல பேர் விடுமுறை எடுத்ததே இந்த பிரச்சனைக்கு காரணம் என விளக்கம் அளித்துள்ளார். ஒரு விமானம் புறப்பட வேண்டுமானால், அதில் விமான அமைப்பு விதிகளின்படி சீனியர் crew கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு புறப்பட வேண்டிய விமானத்தின் சீனியர் crrew வினை தொடர்பு கொண்ட பொழுது, அவர்களது அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அவர்களுடைய குடும்ப நபர்களிடம் விசாரித்த பொழுது அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என பதில் வந்தது.

பலரும், பல்வேறு அவசரங்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட், சார்ஜா, அபுதாபி போன்ற நாடுகளுக்கு புறப்பட வேண்டியது இருப்பதால் வேறு விமான நிறுவனங்களை தொடர்பு கொண்ட பொழுது டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாக ஏறி இருந்தது. இது குறித்து விமான பயணி ஒருவரு கூறும் பொழுது, நான் நள்ளிரவு 1:30 மணிக்கு கொச்சியில் இருந்து சார்ஜா செல்லும் விமானத்திற்கு புக் செய்து இருந்தேன்.

ஆனால் இரவு 11:30 ஆகியும் இன்னும் செக் இன் கேட்டுகள் திறக்கப்படவில்லை இது குறித்து விமான நிர்வாக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்ட பொழுது விமானம் கேன்சல் செய்யப்பட்டு விட்டது எனவும், இந்த பயணத்திற்கு பதிலாக வேறு ஒரு நாளைக்கு பயணம் மாற்றி தரப்படும் எனவும் அல்லது பணம் முழுவதும் திருப்பி தரப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த விமானத்தில் புறப்பட தயாராக இருந்த பலரும் பல்வேறு அவசர காரணங்களுக்காக அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டிய தெரிந்தது. அதில் ஒருவர் கூறும்பொழுது எனது விசா இன்னும் இரண்டு நாட்களில் காலாவதியாக வேண்டிய நிலையில் இருப்பதால் நான் அவசரமாக துபாய்க்கு செல்ல வேண்டும். மற்றொரு நிறுவனத்தில் விசாரித்த பொழுது டிக்கெட் விலை 35 ஆயிரம் என பதில் வந்துள்ளது.

இது சாதாரண டிக்கட் விலையை விட இரண்டு மடங்காகும். மற்றொரு நிறுவனத்திடம் தொடர்பு கொண்ட பொழுது டிக்கெட் விலை 45 ஆயிரம் என்ன நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படும் அனைத்து விமான நிலையங்களிலும் குழப்பத்தால் பயணிகள் விழி பிதுங்கி நின்றனர்.